சனி, 17 செப்டம்பர், 2011

பங்குசந்தையில் லாபம் ? ஒரு அலசல்

முதலில் இந்த தளத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்த பக்கத்தில  பங்குச்சந்தை சார்ந்த விசயங்களை பற்றி பேசலாம்னு இருக்கேன் .நான் புதிதாய் பங்கு சந்தைக்குள் நுழைய  சமயம் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
மறுபடியும் சென்செக்ஸ் 15000 புள்ளிகளுக்கு கீழ் வரும்னு எதிர்பார்த்து 
இருக்கிறேன் .அல்லது கொஞ்சம் 16000 கீழே வந்தாலும் வான்காலம்னு  காத்துகிட்டு இருக்கிறேன்.

சரி , இப்ப தலைப்புக்கு வருவோம் , நிபுணர்கள் எல்லாம் நீண்ட கால முதலீடு  
செய்யுங்கன்னு சொல்லறாங்க சரி , ஒரு பங்கை வாங்கி ஒரு ஒரு வருஷத்திலே 15 சதவீதம் குறைந்த பட்சம் வருதுன்னு வைங்க , திடிர்னு பல காரனங்களால குறியீடு குறையும்போது நம்ம ஒரு வருஷமா நீண்ட கால முதலீட்டாளராக பெற்றிருந்த லாபம் காணாம போயிடுச்சுன்னா என்ன பண்றது ? மறுபடியும் அந்த அ௫ சதவீதம் லாபம் வரதுக்கு இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கனுமா ? வருடத்திற்கு 15  சதவீத லாபமே மாதகனகில் பார்க்கும்போது 2 % கீழ தானே வருது , அப்படி இருக்கும் போது குறியீடு எறங்கி மறுபடியும் ஒரு வருஷம் காத்திருந்தா 1 % கீழ
போய் வங்கி வட்டியை விட கம்மியாதனே வருது ? அதற்க்கு பதில் ஒரு குறிப்பிட்ட % லாபம் வந்தவுடன் விற்றுவிட்டு வெளியல் வருவது தானே
சரியாக இருக்கும் . நீண்ட கால முதலீடலாரக மாதத்திற்கு 2  % கம்மியா
சம்பாதிப்பதை விட 2 % லாபம் எப்ப வருதோ அது ஒரு நாளாக இருந்தாலும் , ஒரு வாரமாக இருந்தாலும் , விற்றுவிட்டு மறுபடியும் அடுத்த வாய்ப்பிற்கு முயற்சிப்பது தான் சரின்னு நான் நினைக்கிறேன் , நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க நண்பர்களே .


 

1 கருத்து:

  1. எனக்கு இதை அறிவதில் ஆர்வம் இருந்தாலும்.. தங்கள் மூலமாவது ஒண்ணுமே தெியாது இனி அறிய முயற்சிக்கிறேன்

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

    பதிலளிநீக்கு